வவுனியாவில் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

வவுனியாவில் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர், நபர் ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சுகாதார பரிசோதகர் நேற்று முன்தினம் (09) மாலை சாந்தசோலைப் பகுதிக்கு கடமை நிமித்தம் சென்றிருந்தார்.

இதன்போது முகக்வசத்தை சீரான முறையில் அணியாமல் மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது, முகக்கவசத்தை சீராக அணியுமாறு சுகாதார பரிசோதகர், குறித்த நபரை எச்சரித்துள்ளார்.

இதன்போது, குறித்த இளைஞர் தம்மை, கழுத்திலும் கையிலும் தாக்கியதாக சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். பின்னர் குறித்த சுகாதார பரிசோதகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தாக்கியதாக சந்தேகிக்கும் நபரை கைது செய்துள்ளனர்.

Vavuniya.jpg

vavunia02.jpg

Author’s Posts