மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க தவறியுள்ளனர் - PHI சங்கம்
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் சுகாதார விதிமுறைகளை சரியான பின்பற்ற தவறியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக மக்களுடைய செயற்பாடுகள் கவலையளிக்கக்கூடியதாக இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன நேற்று (07 சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுப் போக்குவரத்து மற்றும் பொதுவிடங்களில் மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை. அது மாத்திரமன்றி , சில வேலை இடங்களில் முன்னெச்சரிக்கை சுகாதார வசதிகள் திறம்பட பராமரிக்கப்படவில்லை, ”என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் இச்செயற்பாடானது கடந்த மார்ச் மாதத்திற்கு முன்னர் இருந்த நிலைமையை நினைவூட்டுகிறது. இந்நிலை மீண்டும் நிலைமையை மோசமாக்கும் என்றும் மீண்டும் அந்நிலைக்கு சென்றால் சமாளிக்கும் நிலையில் நாடு இல்லையென்றும் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
"எனவே, மக்கள் வெளியில் செல்லும்போது அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். மறுபடியும் ஒரு கொவிட் கொத்தணி உருவாவதை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் கொவிட் தொடர்பான பிரச்சனைகளை நீக்க முடியும் என்றும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
.