மருத்துவர்கள் ஓய்வுபெறும் கட்டாய வயதெல்லை அதிகரிப்பு

மருத்துவர்கள் ஓய்வுபெறும் கட்டாய வயதெல்லை அதிகரிப்பு

அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின், கட்டாய ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சினால் நேற்று இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல், இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாகவும், வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1934 ஆம் ஆண்டு 5 ஆந் திகதி வெளியிடப்பட்ட ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 51 ஆம் பிரிவின் திருத்தப்பட்டவாறான 1948 ஆம் ஆண்டின் 13 ஆம் ஓய்வூதிய கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல் அறிவிததல்.

காலத்திற்குக் காலம் திருத்தப்பட்ட ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 17 ஆம் ஏற்பாடுகளின் கீழ் 2021.07.08 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இல. 2235/60 இல் குறிபபிடப்பட்டுள்ள ஒவ்வொரு பதவிக்கும் உரிய கட்டாய ஓய்வூதிய வயதெல்லை திருத்தம் செய்யும் அட்டவணையில் தற்போது உள்ள பதவிகளுக்கு மேலதிகமாக குறித்த  பதவியையும் சேர்த்து மேலும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image