சில அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11) இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அபயராமதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆகியோருடன் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இன்று (11) திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் பிரமருக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா அறிவித்திருந்த நிலையியே சில ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் மாத்திரம் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம் - தெரன