பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பது தொடர்பான பேச்சு

பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பது தொடர்பான பேச்சு
நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைத் நிரப்புவதற்காக பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவுக்கு கடிதம் மூலம் அறியப்பட்டுள்ளது.


சில விடயங்களை முன்வைத்து அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியஆராய்ச்சியினால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சுமார் 60,000 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் மற்றும் தற்போது பயிலுனர் பயிற்சியில் உள்ள பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் வகையில் குறித்த ஆட்சேர்ப்பை செய்யுமாறு நீண்டகாலமாக எமது சங்கத்தினர், முன்னாள் கல்வி அமைச்சருக்கும், தற்போதைய கல்வி அமைச்சராகிய உங்களுக்கும் எழுத்துமூலமும், பேச்சுவார்த்தைகளின்போதும் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தொழிலற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளை தொழிலுக்கு அமர்த்தும் 2020 வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி விண்ணப்பம் கோரப்பட்ட முதலாவது வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பத்திரிக்கை விளம்பரம் ஊடாக இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பயிலுனர்களை பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்க்கப்பட உள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர்களில், ஆசிரியர் பதவிக்காக விருப்பமின்மையை வெளிப்படுத்திய தரப்பினரும் உள்ளனர். பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கும்போது பிரதேச செயலக காரியங்களுக்கு அனுப்பப்பட்ட பயிலுனர்கள் எழுமாறாக தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்படாத பயிலுனர்களிலும், ஆசிரியர் சேவைக்கான தகைமையை கொண்டுள்ள ஆர்வமுடைய தரப்பினரும் உள்ளதுடன் அவர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்குதல்.

பயிலுனர்களில் சுமார் 18,000 பேரளவில் ஆட்சேர்க்கப்பட உள்ளதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் அபிவிருத்தி அதிகாரிகள் நாட்டிலுள்ள பாடசாலைகளில் இரண்டாயிரத்துக்கும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதுடன் அவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட முறைமையின் அடிப்படையில் இம்முறை சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என நாம் சுட்டிக் காட்டுவதுடன், நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிடுகின்றோம்.

அழகியல் பாடநெறிகளில் பட்டதாரிகள் மொழிப் பட்டதாரிகள் உள்ளிட்ட ஆசிரியர் சேவைக்காக தகைமையுடைய பட்டதாரிகள் பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியின்கீழ் கல்விசாரா நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நிலையில் அந்த பட்டதாரிகளுக்கு வாய்ப்பு வழங்குவது நியாயமானதாகும்.

சுமார் 60,000 வெற்றிடங்கள் நிலவுகின்ற நிலையில் 18,000 பயிலுனர்களுக்கும் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் மாகாண மட்டத்தில் ஆசிரியர் போட்டிப் பரீட்சையை நடத்தி சித்தியடைந்தும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்பதால் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கப்படாமல் மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளிடையே தகைமையுடைய குறித்த தரப்பினர் தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் அரசாங்கமும் உடனடியாக அவதானம் செலுத்தி ஆசிரியர் வெற்றிடத்திற்கு ஆட்சேர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதற்கு அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என எமது சங்கம் மீண்டும் அனைத்து அதிகாரிகளிடமும் கோருகின்றது என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image