ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் அபயராமயிலும் வீதியிலும் - இதற்கிடையே ஜனாதிபதியின் அழைப்பு

ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் அபயராமயிலும் வீதியிலும் - இதற்கிடையே ஜனாதிபதியின் அழைப்பு
இலங்கையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் ஒக்டோபர் 6ஆம் திகதி தங்களது வேதன பிரச்சினைக்கு தீர்வு காணுமாறுகோரி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் நாடு முழுவதிலும் பல்வேறு பாகங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 
சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான தங்களுக்கு பேச்சுவார்த்தை ஒன்றை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர் ஆசிரியர் சங்கங்கள் கோரின.
 
இந்த போராட்டத்தின் பிரதான போராட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெற்றது.  அங்கு கூடிய ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் முற்பகல் 10 மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்தன.  அதற்கு சமாந்தரமாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 
 
எவ்வாறு இருப்பினும் இந்த போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட மையானது, சுகாதார பாதுகாப்பு விதிகளுக்கு அமைய பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்படாத பின்னணியிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
 
போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,
 
ஆசிரியர் அதிபர் சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்று நாங்கள் இந்த போராட்டத்தின் மூலமாக அரசாங்கத்திற்கு செய்தி ஒன்றை வழங்குகின்றோம்.  தீர்வுக்காக நாம் எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுப்போம்.
 
இதேநேரம் ஆசிரியர் அதிபர் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்காக 6ஆம் திகதி நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் சர்வகட்சி மாநாடு ஒன்று இடம்பெற்றது. ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் மத்தியஸ்த நிலைக்கு வந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அந்த மாநாட்டில் இணைந்து கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.  ஆசிரியர் அதிபர் சம்பள பிரச்சினை மற்றும் எதிர்கால கல்வி பிரச்சினை தொடர்பில் இந்த சர்வ கட்சி மாநாட்டில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.  
 
இது தொடர்பில் தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி சாதகமாக பதிலளித்ததாக அபயராம விகாராதிபதி, அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவரான முருத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.  இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
 
அபயராமயில் ஏதாவது கூட்டம் இடம்பெறுகின்றதா என்று ஜனாதிபதி தொலைபேசியில் அழைத்து கேட்டார். ஆசிரியர் அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இடம் பெறுவதாக நான் கூறினேன்.  இந்தப் பிரச்சினையை தேரர்கள் கையில் எடுங்கள். இதற்கு நாங்கள் தீர்வு வழங்க வேண்டும் என ஜனாதிபதி கூறியதாக அவர் தெரிவித்தார்.
 
இதேநேரம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் 200க்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பிரிவெனா மற்றும் சீலா மாதா  பாடசாலைகளில் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பௌத்த ஞாயிறு பாடசாலை பிரிவெனா மற்றும் தேரர்கள் கல்வி இராஜாங்க அமைச்சின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள்  மற்றும் செற்குழுவினரின் விருப்பத்தின்படி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய கற்றல் நடவடிக்கைகள் ஒக்டோபர் 21ஆம் திகதி தொடக்கம் முறையாக ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எவ்வாறு இருப்பினும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இவ்வாறு ஆரம்பிப்பது எந்தளவு தூரத்திற்கு சாதகமாக அமையும் என்பது சந்தேகத்துக்குரியது.
 
இதேநேரம் ஆசிரியர் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக ஆசிரியர் தினத்தன்று முதல்முறையாக உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.   இலங்கையில் ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் அமைச்சில் இந்த நடவடிக்கை இடமபெற்றது. இதுவரையில் கல்வி அமைச்சினால் ஆசிரியர் அதிபர்களுக்கு உத்தியோகபூர்வமாக அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கவில்லை.
 
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன,
 
ஆசிரியர்களுக்காக நாங்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.  அதேபோன்று கடமை மற்றும் பொறுப்புகளை புரிந்துகொண்டு 43 இலட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் கடமைக்கு அப்பாற் சென்று தங்களது கடமை மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
 
எவ்வாறு இருப்பினும் ஆசிரியர்களின் உண்மையான பிரச்சினை உத்தியோகபூர்வ அடையாள அட்டை இல்லை என்பதை அமைச்சர் புரிந்து கொள்ளாதது கவலைக்குரியதாகும்.
 
பி.டபிள்யு. முத்துகுடஆராச்சி
தமிழில் - ராஜா
 
 
abayaramaya-1_large.jpg
 
Teachers-1.jpg
 
 
Teachers-2.jpg
 
Teachers-3.jpg
 
புகைப்பட உதவி - லங்காதீப மற்றும் த லீடர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image