அநாவசிய செலவுகளுக்காக அரசாங்கம் கடந்த 16 மாதங்களில் 1300 பில்லியன் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு 64 பில்லியனை அரசாங்கத்தினால் ஒதுக்க முடியாதா? என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கேள்வியெழுப்பியுள்ளது.
நாடு முழுவதும் ரயில் சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தீர்மானித்துள்ளார்.
அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளும் இன்று ஆரம்பமாகின்ற நிலையில், ஆசிரியர், அதிபர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்து அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கு 03 ஆயிரம் ரூபா முதல் 24 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு வழங்க எமது அரசு தீர்மானித்தது.
தனியார்துறை ஊழியர்களின் வயதை அதிகரிப்பதற்கான விடயங்கள் அடங்கிய சட்டவரைபு அனுமதிக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாளை (25) முதல் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இன்றும், நாளையும் பாடசாலைகளுக்கு சென்று, சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கை பங்களிக்குமாறு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கோரியுள்ளார்.
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டிப்பரீட்சை காரணமின்றி பிற்போடப்பட்டமையினால் 30,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நாளை (25) அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் சீருடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய கட்டாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளை
பலவந்தமான முறையில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர முடியாது.