ரயில் சேவைகள் தொடர்பான அறிவித்தல்: யாருக்கு பயணிக்க முடியும்?

ரயில் சேவைகள் தொடர்பான அறிவித்தல்: யாருக்கு பயணிக்க முடியும்?

நாளை (25) முதல் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கிணங்க நாளை முதல் 133 ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

மாதாந்த பருவச்சீட்டு வைத்திருப்போருக்கு மாத்திரமே நாளை முதல் ரயில் போக்குவரத்தில் ஈடுபட முடியும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, பருவச் சீட்டுத் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகத் தொடருந்து நிலையங்களுக்கு காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 
 
கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
 
அத்துடன் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள் என்பன முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image