இன்றும், நாளையும் பாடசாலைகளுக்கு சென்று, சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கை பங்களிக்குமாறு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கோரியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளை எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
200 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகள், கடந்த 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.
அதன் இரண்டாம் கட்டமாக, சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, 200 இற்கும் அதிக மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைய, பாடசாலைகளை சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்வதற்கு பெற்றோர்களுக்கும், பாடசாலை அபிவிருத்திக் குழுக்களுக்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஆசிரியர்களும் இந்த சுத்திகரிப்பு பணிகளுக்கு பங்களிப்பு செய்யுமாறு கோருவதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.