போட்டிப்பரீட்சை பிற்போடப்பட்டதால் 30,000 பட்டதாரிகள் பாதிப்பு!
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டிப்பரீட்சை காரணமின்றி பிற்போடப்பட்டமையினால் 30,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசின் இத்தீர்மானத்தினால் இதற்கு பிறகு பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. இத்தீர்மானம் பாடசாலை மாணவர்களுக்கு போன்றே பட்டதாரிகளுக்கும் இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என்று அச்சங்கத்தின் அமைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்தனர். விண்ணப்பங்களை அனுப்புவதற்கு ஆயிரம் ரூபா பணம் அறவிடப்படுகிறது. இதனூடாக பெருந்தொகையான பணத்தை அரசாங்கம் விண்ணப்பதாரிகளிடமிருந்து அறிவிட்டுள்ளது.
எனவே விண்ணப்பதாரிகள் மற்றும் எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்குள் வர எதிர்பார்த்துள்ளோரை உள்வாங்கும் நடைமுறை என்பவற்றை விளக்குமாறு அரசிடம் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் இத்தீர்மானமானது பிள்ளைகள் பட்டதாரிகளிடம் கற்றறியும் உரிமையை இல்லாமல் செய்யும் செயலாகும். பல பட்டதாரிகள் வேறு தொழில்களுக்கு செல்லாமல் ஆசிரியர் சேவைக்கு செல்லும் நோக்கில் காத்திருக்கின்றனர். எந்த மாற்றுவழிகளையும் அறிவிக்காமல் அரசாங்கம் போட்டிப்பரீட்சையை ரத்து செய்துள்ளது. இது பட்டதாரிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசாங்கம் விரைவில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் தென்னே ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.