அரச ஊழியர்களுக்கு வரவு-செலவுத் திட்டத்தில் அரசு சம்பள உயர்வு வழங்குமா?

அரச ஊழியர்களுக்கு வரவு-செலவுத் திட்டத்தில் அரசு சம்பள உயர்வு வழங்குமா?

அரசாங்க ஊழியர்களுக்கு 03 ஆயிரம் ரூபா முதல் 24 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு வழங்க எமது அரசு தீர்மானித்தது.

2020 முதல் சம்பள உயர்வு வழங்க நிதி கூட ஒதுக்கப்பட்டது. எனவே ரனுத்கே அறிக்கை படி அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் பட்ஜட்டில் அரசாங்கம் சம்பள உயர்வு வழங்குமா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (23) சபையில் கேள்வி எழுப்பினார்.

விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 03 ஆயிரத்தில் இருந்து 24 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க எமது கடந்த அரசாங்கம் முடிவு செய்தது. அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கி 2020 இல் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த அரசு ஆட்சிக்கு வந்ததும் அதனை நிறுத்தியது. ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒதுக்கிய நிதி நிறுத்தப்பட்டது. ரனுக்கே அறிக்கை படி அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் பட்ஜட்டில் அரசாங்கம் சம்பள உயர்வு வழங்குமா?, மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த நிவாரணங்கள் எங்கே?. பெற்றோல் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வூதியம் பெறுவோர் எப்படி வாழ்வது? என கேள்வி எழுப்பினார்.

ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன இதற்கு பதிலளித்தபோது,

பொறுப்பான அமைச்சர் அடுத்த வாரம் பதில் வழங்குவார் என்றார்.

03 இலட்சம் அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை கடந்த அரசு நிறுத்தியது. ஆனால் அதனை வழங்க எமது அரசு நடவடிக்கை எடுத்தது.அக்ரஹார காப்புறுதியை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க எமது அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றி அவர் பேசவில்லை. அக்ரஹார காப்புறுதியை உங்கள் அரசு வழங்கவில்லை. வெட்கமில்லையா? எமது அரசு தான் அதனையும் வழங்கியது. விவசாயிகளின் பிரச்சினை பற்றி எமக்கு தெரியும். அவர்களின் நெல்லுக்கு அதிக விலை வழங்கப்பட்டது. விவசாயத்தையும் பெருந்தோட்டத்துறையையும் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்தில் நிதி அமைச்சர் எமது நிவாரண திட்டங்களை முன்வைப்பார் என்றார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image