ஆட்சேர்க்கப்பட்ட 60,000 பட்டதாரிகள் தொடர்பில் அரச சேவைகள் அமைச்சின் செயலாளரின் கருத்து
அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையில், அண்மையில் 60,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதேதவிர, வெற்றிடம் நிலவிய காலப்பகுதியில் அந்த 60,000 ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை என அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
அனைத்து பட்டதாரிகளுக்கும் அரசாங்க தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும் என எவ்வித கடப்பாடும் இல்லை என்றும், எந்த ஒரு நாட்டிலும் இவ்வாறாக நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை என்பதால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்பட்டதே தவிர, உண்மையிலேயே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்திற்கு ஏற்ற வகையில் அவர்களிடமிருந்து நூற்றுக்கு நூறு வீதம் சேவை வழங்கப்படுகின்றதா என்பது தொடர்பில் பிரச்சினை உள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாக நியமனத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவதையே அவர்கள் அதிகளவில் செய்வதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.