எதிர்வரும் வருடம் நிறைவடைவதற்குள் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
All Stories
சுமார் இருபத்தைந்து வருடங்களாக நீடித்து வந்த சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பில் அறிவித்தமைக்காக பாராளுமன்ற குழு அறை 01இல் இன்று (10) இடம்பெற்ற சந்திப்பில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.
அரச நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் தரவுகள் 'ஈ - கிராம உத்தியோகத்தர்' முறைமையில் சேர்க்கப்படவுள்ளது.
ஆசிரியர் - அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளளை முன்வைத்து ஆர்ப்பாட்டமொன்றை நாளை (11) முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினமும் (09) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாவனெல்ல - மெதிரிகம பாடசாலைக்குச் சென்று ஆசிரியர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் மாவனல்ல பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்டிருந்த 'அக்ரஹார காப்புறுதித் திட்டத்தை' தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மிக மோசமான காலநிலை காரணமாக ரயில் போக்குவரத்தை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.