அனுமதியின்றி ஆயிரக்கணக்கான பேர் இலங்கை போக்குவரத்துச் சபையில் இணைப்பு - கோப்

அனுமதியின்றி ஆயிரக்கணக்கான பேர் இலங்கை போக்குவரத்துச் சபையில் இணைப்பு - கோப்

உரிய அனுமதியின்றி இலங்கை போக்குவரத்து சபைக்கு கடந்த 2017ம் ஆண்டு ஆயிரக்கணக்கானவர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டு சம்பளம் வழங்கியமை தொடர்பில் கோப் குழு கடும் கண்டனத்தை வௌியிட்டுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து சபையில் 2770 மேலதிக நிரந்தர ஊழியர்கள் உள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று கோப் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலை மிகவும் பாரதூரமானது என்று பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழு தலைவருமான பேராசிரியர் சரித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தினால் 2017ம் ஆண்டு மார்ச் 17ம் திகதி குறிப்பிடப்பட்ட கடிதத்தினூடாக 24,886 ஊழியர்களே இலங்கை போக்குவரத்து சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது அந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 27,656 ஆகும் என கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகாமைத்துவ சேவை திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கைக்கமைய, செயற்பட தவறியுள்ளதாகவும் ஊழியர்களை உள்ளீர்த்தல் மற்றும் பதவியுயர்வு முறையும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை என்றும் கோப் குழு விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அவசியமான ஊழியர்களின் எண்ணிக்கையை ஆராய்ந்து உடனடியாக பிரச்சினையை உடனடியாக தீர்வு காணுமாறு கோப் குழுத் தலைவர் போக்குவரத்துசபை பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொது போக்குவரத்து தொடர்பான பாராளுமன்ற உபகுழுவின் தலைவர் முன்வைத்த அறிக்கையில் மேற்படி விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image