ரயில் சேவை பாதிக்கப்படும் சாத்தியம்!

ரயில் சேவை பாதிக்கப்படும் சாத்தியம்!

எதிர்காலத்தில் ரயில் சேவைகள் தடைப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள், கனிஷ்ட ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிப்பதில் உள்ள சிக்கல் காரணமாக ரயில் சேவைகள் தடைப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில அரச சேவையாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருந்தபோதிலும் அனைவரினதும் அத்தியவசிய சேவையான ரயில் சேவை தொடர்பில் கவனம் செலுத்தாமை குறித்து தாம் கவலையடைவதாகவும், பொது போக்குவரத்துச் சேவையில் பெரும்பங்கு வகிக்கும் ரயில் சேவை குறித்து இதனை விட கவனம் செலுத்தப்படாவிடின் ரயில் சேவை எதிர்காலத்தில் இடைநிறுத்த வேண்டியேற்படும் என்றும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் தொற்று காலத்தில் காலத்திற்போன்று வாரத்திற்கு ஒரு தடவை சேவை நிலையத்திற்கு அழைப்பதனூடாக எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர் அவ்விடயம் தொடர்பில் உரிய அமைச்சருடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image