சுற்றறிக்கையை அமுலாக்கும்போது அரச ஊழியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்

சுற்றறிக்கையை அமுலாக்கும்போது அரச ஊழியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்

அரச ஊழியர்கள் எதிரநோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சந்தரப்பம் வழங்குமாறு, அரச சேவைகள் அமைச்சசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச அலுவலங்களில் உத்தியோகத்தர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்ததும் சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதில் அரச  ஊழியர்களுக்கு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னேவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கம், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம், அரசசேவை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கம், அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கம் ஆகியவற்றினால்  கலந்துரையாடலுக்கான கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்று இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரச மற்றும் மாகாண அரச உத்தியோகத்தர்களை அரச அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி தற்போது உங்களின் கையொப்பத்துடன் பல சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள் என்பன அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் மாகாண பிரதானிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள் எத்தனை வௌியிடப்பட்டாலும், குறித்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தும்போது, சில நிறுவனப் பிரதானிகள் மற்றும் சில மாகாண பிரதானிகளால் எடுக்கப்படும் தன்னிச்சையான தீர்மானங்களால் அரச உத்தியோகத்தர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டமை, பொதுப்போக்குவரத்தை இயக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல், தனியார் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்பன காரணமாக, அரச உத்தியோகத்தர்களை காரியாலயங்களுக்கு அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அதிகாரிகளை சேவைக்கு அழைக்கும்போது முன்னெடுக்கப்பட வேண்டிய வரையறைகளை தவிர்த்து சில நிறுவன பிரதானிகளின் அழுத்தங்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக சேவைக்கு அழைப்பதி சில நிறுவனங்களில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமையை தவிர்ப்பதற்காகவும், குறித்த சுற்றறிக்கை மற்றும் கடிதங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை உள்ளிட்ட காரணங்கள் தொடர்பில் உடனடியாக பேச்சுவார்த்தை அவசியமாக உள்ளது.

எனவே, குறித்த கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பம் வழங்குமாறு அரச முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை என்பனவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி கோரிக்கை விடுக்கப்படுகிறது. - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image