ஜூலை 10 வரை அத்தியவசிய சேவைகள் மாத்திரம்!

ஜூலை 10 வரை அத்தியவசிய சேவைகள் மாத்திரம்!

கையிருப்பில் உள்ள எரிபொருளை அவதானமாக பயன்படுத்தும் வகையில் இன்று (28) தொடக்கம் அத்தியவசிய தேவைகள் மாத்திரமே முன்னெடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, துறைமுகம், விமானநிலையம், உணவு விநியோகம் போன்ற அத்தியவசிய தேவைகள் மாத்திரமே செயற்படும் என்றும் ஏனைய சேவைகள் வீட்டில் இருந்து பணியாற்றும் செயற்பாட்டுக்கமைய நடைபெறும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ம் திகதி வரை இச்செயற்பாடு நடைமுறையில் இருக்கும் என்றும் பாடசாலை நடத்தல் மற்றும் கிராம பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை அந்தந்த மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image