மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு GMOA வேண்டுகோள்

மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு GMOA வேண்டுகோள்

மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

தற்சமயம் நாட்டில் மருந்துப் பொருட்கள் இருப்பு போதுமானதாக இல்லை. கிடைக்கும் மருந்துகளின் கையிருப்பு குறைவடைந்துள்ளது. இது மிக முக்கிய பிரச்சினையாகும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் டொக்டர் பிரசன்ன கொலம்பகே தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ கடமைகள், வீட்டு வேலைகள் போன்றவற்றின் போது விபத்து ஏற்பட்டால், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் சிரமம் இருப்பதாகவும் மருத்துவர் கூறினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்க காரியாலயத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்வேறு நோய்களால் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள மருந்துகளை கவனமாக வைத்து பயன்படுத்த வேண்டும் என்றும் குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image