ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த 6 விடயங்கள்

ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த 6 விடயங்கள்
ஆசிரியர் சேவையை முன்னெடுப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்த வௌியிடப்பட்டுள்ள 6 முக்கிய விடயங்கள்.
 
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் இது குறித்து நேற்று வௌியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
 
அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக இன்று (27.06.2022) நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர் வரவு நிலை குறைவாகக் காணப்பட்டதோடு. பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை.
 
01. மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பாசாலைகளை இயக்குதல் என்ற அரசாங்கத்தின் குழப்பமான அறிவித்தல்.
 
02. வருகைதரமுடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாக கணிக்க முடியாது. என்ற ஆசிரியர்களுக்குச் சாதகமான அறிவித்தல்.
 
03. அதிபர், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதியின்மை.
 
04. சீரற்ற எரிபொருள் விநியோகம்.
 
05. இ.பொ.ச ஊழியர்களின் பணிப்பகஸ்கரிப்பு.
 
06. எரிசக்தி அமைச்சரின் எரிபொருள் இல்லையென்ற அபாயகரமான அறிவித்தல்.
 
இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மார்க்கங்கள் சீராகும்வரை பாடசாலை செல்வதைத் தவிப்போம் என நாம் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
 
அதன்படி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் போக்குவரத்து மார்க்கங்கள் இல்லாத பலர் எமது வேண்டுகோளை ஏற்று பாடசாலைக்குச் செல்லவில்லை. ஒரு சில பாடசாலை அதிபர்கள் ஆசியர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்த அதேவேளை மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்ததாக எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், வலயச் செயலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
இத்தகைய நிலை தொடராமல் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் சீராக, அரசாங்கம் ஆசிரியர்களுக்கான எரிபொருள் விநியோகம், போக்குவரத்து மார்க்கங்கள் என்பவற்றிற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த பாடசாலைகளையும் நீண்ட நாட்களுக்கு மூடும்நிலை ஏற்படும்.
 
இவ்வாறு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
May be an image of text

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image