பஸ் கட்டணம் அதிகரிக்காவிடின் பணிப்பகிஷ்கரிப்பு

பஸ் கட்டணம் அதிகரிக்காவிடின் பணிப்பகிஷ்கரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கேற்ப போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படாவிடின் நாடு தழுவிய போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (27) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினத்திற்குள் (27) உரிய தரப்பினர் உரிய தீர்மானத்தை எடுக்கத் தவறினால் கட்டண திருத்தம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள ஜூலை முதலாம் திகதி வரை பழைய விலைக்கே எரிபொருளை வழங்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் மாத்திரம் பஸ்களுக்கான செலவு சுமார் 6 வீதத்தினால் அதிகரித்துள்ளது. பஸ் கட்டண அதிகரிப்பின் போது ஏனைய செலவீனங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும். நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்குப் பதிலாக மக்கள் மீது விலையேற்றத்தினை சுமத்தியமையை வன்மையாக கண்டிப்பதாகவும் கெமுனு விஜேரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image