வருடாந்த பணவீக்க தரவுகளுக்கமைய இலங்கை உலகில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது என்று பேராசிரியர் ஸ்டீவ் ஹண்கே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜொன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியரான ஸ்டீவ் ஹன்கேவுடைய 'ஹன்கே பணவீக்க கொள்கை' யினை புதுப்பித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இலங்கையை விட அதிக பணவீக்கம் சிம்பாபே மாத்திரமே காணப்படுகிறது. இலங்கைக்கு அடுத்ததாக துருக்கி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
ஸ்டீவ் ஹன்க் குறித்த விடயம் தொடர்பில் வௌியிட்ட டிவிட்டர் தரவு கீழே தரப்பட்டுள்ளது.