சிறுவர் வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்படும் நிலை!

சிறுவர் வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்படும் நிலை!

எதிர்வரும் வாரங்களில் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை செயற்பாடுகள் முடங்கும் நிலை ஏற்படும் என்று வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

வௌிநோயாளர் பிரிவில் வழங்கப்படும் சிகிச்சை தொடர்ச்சியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மருத்துவர்கள் உட்பட ஏனைய சுகாதார ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணம். வைத்தியசாலை ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிப்பதற்கு பொதுப் போக்குவரத்து சேவையொன்றையாவது ஏற்பாடு செய்து தருமாறு பணிபாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை உட்பட ஏனைய சேவைகள் மிகவும் சிரமத்துடன் முன்னெடுக்கப்படுக்கும் நிலை தோன்றியுள்ளதாகவும் இந்நிலை இன்னும் மோசமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் சிறுவர்களுக்கு தேவையான மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் உதவியாக வழங்கப்படும் மருந்துகள் தற்போது பயன்படுத்தப்படுவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image