இன்று காலை 8 மணியுடன் ஊரடங்கு நீக்கம்

இன்று காலை 8 மணியுடன் ஊரடங்கு நீக்கம்

மேல் மாகாணத்தின் 7 பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்றிரவு 9 மணிக்கு அமுலாக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிஸ்ஸ, கொழும்பு - வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பொலிஸ் அதிகார பிரிவுகளில் நேற்றிரவு 9 மணிமுதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 8 மணியுடன் பொலிஸ் ஊரடங்கு நீக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image