எரிபொருள் இல்லையேல் நன்பகல் முதல் பணிப்பகிஷ்கரிப்பு -இபோச தொழிற்சங்கம்
தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், இன்று (08) நண்பகல் முதல் கடமைக்கு செல்லப்போவதில்லை என இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஊழியர்கள், சேவைக்கு சமூகமளிக்க முடியாதுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்கத்தின் தலைவர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், சேவை நிறைவடைந்து மீள வீடு திரும்பவும் முடியாத நிலை காணப்படுகிறது. பல மாதங்களுக்கு முன்பே இந்த விடயம் தொடர்பில், அதிகாரிகளு;ககு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் திணைக்கள தலைமையகத்திற்கு முன்பாக போராட்டம்
எரிபொருள் நெருக்கடியால் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தம்
திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள ரயில் திணைக்கள ஊழியர்கள்!
போக்குவரத்து அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டபோதிலும், எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. எனவே, இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், இன்று மதியம் 12 மணிமுதல் சேவைக்கு சமூகமளிக்கப்போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்கத்தின் தலைவர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.