முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு கடவுச்சீட்டு காரியாலயத்தில் தற்காலிக கடமை!

 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு கடவுச்சீட்டு காரியாலயத்தில் தற்காலிக கடமை!

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று முன்தினம் (06) அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சார்பில் கல்வி அமைச்சிடம் விசேட கோரிக்கை

கிராம உத்தியோகத்தர் சங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு ஆசிரியர் சேவை: வயது வரம்பு தடை நீக்க நடவடிக்கை

 குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கொழும்பு அலுவலகத்திற்கு வருகை தரும் சேவைபெறுநர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துள்ளதையடுத்து, சம்பந்தப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை மூன்று மாத காலத்திற்கு தற்காலிகமாக அங்கு சேவையில் நியமிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்த கோரிக்கையை அடுத்து பொதுநிர்வாக அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

 இதன்படி, பத்தரமுல்ல குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திலிருந்து 10 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை அத்திணைக்களத்திற்கு நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image