அரசாங்கம் தனது அநீதியான வரி விதிப்பை வாபஸ் பெறாவிட்டால் சம்பள தினத்தை தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுத் துறையில் உள்ள தொழில் வல்லுநர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அமைப்புகள் எச்சரித்துள்ளன.
All Stories
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரண்டு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவரான .ஆனந்த பாலித உட்பட இருவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
2022 க.பொ. த உயர்தர பரீட்சை நடைபெற்றுவரும் இச்சந்தர்ப்பத்தில் மின்தடையை நீக்காதிருக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானமானது பிள்ளைகளுடைய வாழ்க்கையுடன் விளையாடும் செயலாகும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை பொதுமக்களின் பார்வைக்காக வெளிப்படுத்தியுள்ளனர்.
மேற்படிப்புக்காக வௌிநாடு செல்லும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு அரசினால் வழங்கப்படும் விமான அனுமதிச்சீட்டு உட்பட அனைத்து கொடுப்பனவுகளையும் நிதியமைச்சு நிறுத்தியுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று (18.01.2023) காலை மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
நிர்வாக நிலை தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களுக்கான சம்பளம் நாளை (25) வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதுமுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது.
ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளை சட்ட விரோதமாக கைப்பற்றி உபயோகித்து வரும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அந்த காணிகளை மீள சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தேசிய போராட்டத்தை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை இன்று (19) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (23) ஆரம்பமாக உள்ள 2022 (2023) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக நான்கு விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று தெரிவித்தார்.