பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடைய மேற்படிப்புக்கான கொடுப்பனவுகளும் நிறுத்தம்!

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடைய மேற்படிப்புக்கான கொடுப்பனவுகளும் நிறுத்தம்!

மேற்படிப்புக்காக வௌிநாடு செல்லும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு அரசினால் வழங்கப்படும் விமான அனுமதிச்சீட்டு உட்பட அனைத்து கொடுப்பனவுகளையும் நிதியமைச்சு நிறுத்தியுள்ளது.

 இவ்விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவுக்கு நிதியமைச்சு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையின் காரணமாக அனைத்து அரச நிறுவனங்களுக்கம் பின்னபற்றப்படும் நடைமுறையானது அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் செல்லுபடியாகும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 தொடர்ச்சியாக 7 வருடங்கள் பல்கலைக்கழகங்களில் சேவையாற்றும் விரிவுரையாளர்களுடைய உயர்கல்வி மற்றும் பயிற்சிகளுக்காக வௌிநாடு செல்வதற்கு ஒரு வருட விடுமுறையுடன் விமான டிக்கட் கட்டணம் உட்பட பல கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று அவர்களுடைய நியமனக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நிறுத்துவதானது மனித உரிமை மீறல் என்றும் ஒரு வருட விடுமுறையானது சேவைக்காலத்துக்குட்பட்டது என்ற காரணத்தினால் அக்கால வரையறைக்கள் உள்ள எந்த வித உரிமைகளையும் மறுக்க முடியாது என்றும் பல்கலைக்கழ சட்டபீட விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கும் முன்னர் நிதியமைச்சு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியிருந்தால் சாதகமான நிலையை எட்டியிருக்கலாம் என்று மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பல்கலைக்கழகங்களுக்கு கூட்டுறவு முறையை உருவாக்குதல், வெளிநாடு செல்லும் ஆசிரியர்களுக்கான காத்திருப்புப் பட்டியல் தயாரித்து அதற்கேற்ப நிதி வசதிகளை வழங்குதல், பல்கலைக்கழகங்கள் ஈட்டும் வருமானத்தில் இந்த நிதி வசதிகளை வழங்கி பின்னர் அவற்றை அறவிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதற்கு நல்ல வாய்ப்புகள் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்புதிய தீர்மானம் காரணமாக பல்கலைக்கழகங்கள் 'பாலைவனனங்களாக'மாறுவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image