நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
All Stories
இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இன்று மதியம் 12.30 முதல், சேவையிலிருந்து விலகி, அரை நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலை கொழுந்தின் அளவை குறைத்து மதிப்பிடும் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக தாம் நிறுத்தல் அளத்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்து இருந்தோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் மேலும் காலதாமதம் செய்து வருவதாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.
பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
பரீட்சை நடைபெறும் காலங்களில் மின்துண்டிப்பை தவிர்க்குமாறு மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 14ம் திகதி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கறைநிரற்பட்டியற்படுத்தப்பட்டு மீண்டும் ஆட்சேர்ப்புச் செய்யப்படக்கூடாத அரச உத்தியோகத்தர்களின் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கைக்கு எதிராக தொழில்சார் நிபுணர்கள் உட்பட அனைத்துத் துறை ஊழியர்களும் நாளை (08) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட மஸ்கெலியா - ஸ்டோக்கம் மற்றும் கவரவில ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கேட்டறிந்ததுடன், அவை தொடர்பில் தொழில் ஆணையாளருடனும் பேச்சு நடத்தினார்.
மலையகத்துக்கான இந்திய அரசின் 10,000 வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்.
தனியார் துறை ஊழியர்களுக்கு 'அக்ரஹார' சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்காக 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமையவே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
தனியார் துறை ஊழியர்களுக்கு 'அக்ரஹார' சுகாதார காப்புறுதிக்கு இணையான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான பிரேரணை 2023 வரவு செலவுத் திட்ட உரையில் கௌரவ ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக, மேற்படி பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு இன்று (07) பகல் கூடவுள்ளது.