வரி விதிப்பு எதிராக கடுமையான நடவடிக்கை - எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்

வரி விதிப்பு எதிராக கடுமையான நடவடிக்கை - எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்

அரசாங்கம் தனது அநீதியான வரி விதிப்பை வாபஸ் பெறாவிட்டால் சம்பள தினத்தை தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுத் துறையில் உள்ள தொழில் வல்லுநர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இந்த தொழில்முறை அமைப்புகள் ஏற்கனவே அநீதி என்று அவர்கள் கூறும் வரி முறைக்கு எதிராக கருப்பு எதிர்ப்பு வாரத்தை அறிவித்துள்ளன.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம், இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று (24) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளது.

2023 ஜனவரி முதல் மாதாந்தம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஊழியர்களிடமிருந்த 6% முதல் 36% வரையில் வரி விதிப்பதற்கு ஏற்கனவே இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image