கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரையான ரயில் சேவை இன்று (05) முதல் அநுராதப்புரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
All Stories
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று(05) முதல் ஆரம்பமாகின்றது.
பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 வரையில் (தரம் 6 தவிர்ந்த) மாணவர்களை உள்வாங்குவதற்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் “குரு செத்த” கடன் திட்டத்திற்கான வட்டி வீதம் 15.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சகல அரசாங்க பாடசாலைகளிலும் பிரதி புதன்கிழமைகளில் காலை 10 நிமிடங்கள் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புகையிரத ஊழியர் பற்றாக்குறையை போக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்காவிட்டால் உடனடியாக நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தயங்கமாட்டோம் என இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் நேற்று (02) தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (02) முதல் வழங்கப்படுகிறது.
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் 3,000 பேரை ஆட்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஓட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும், அதன் நன்மையை பயணிகளுக்கு வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
விசேட அரச ஊழியர்களின் ஓய்வூதியக் காலம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வது குறித்து பொது நிர்வாக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இரண்டு நிறுவனங்களில், பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த நிறுவனங்களிடம் இருந்து அறிக்கையை கோரியுள்ளார்.
அலுவலக நேரத்தில் அரச அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தினால், அது தொடர்பில் கடுமையாகச் செயற்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.