பிள்ளைகளின் வாழ்க்கையுடன் விளையாடும் அரசாங்கம் - இலங்கை ஆசிரியர் சங்கம்

பிள்ளைகளின் வாழ்க்கையுடன் விளையாடும் அரசாங்கம் - இலங்கை ஆசிரியர் சங்கம்

2022 க.பொ. த உயர்தர பரீட்சை நடைபெற்றுவரும் இச்சந்தர்ப்பத்தில் மின்தடையை நீக்காதிருக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானமானது பிள்ளைகளுடைய வாழ்க்கையுடன் விளையாடும் செயலாகும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பரீட்சை சந்தர்ப்பத்தில் தொடர் மின்சாரத்தை வழங்க மேலதிகமாக 5 பில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கருத்து வௌியிடுகையில் பரீட்சை நிறைவடையும் வரையில் இரவிலும் பகலிலும் மின்தடை ஏற்படாது என்று சுட்டிக்காட்டியிருந்தார். அவரின் அறிக்கையில் 7.00 மணிக்கு மின்தடை ஏற்படாது என்று குறிப்பிடப்பட்டிருந்தமை பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவது சாத்தியமற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் தெரிவிக்கையில் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் 5 பில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருளை வழங்கினால் மாத்திரமே தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் கீழியங்கும் மின்சாரசபை, இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் என்பன பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்துடன் விளையாடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image