அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான அரசின் புதிய வரி வருமானங்கள் தொடர்பான முன்மொழிவுகள் அமுலாக்கம் செய்வதற்கு ஆரம்பித்துள்ளதுடன், அதன்மூலம் வருமானம் திரட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுப்பதால், அரச நிதிப்பாய்ச்சல் வரையறைகளுக்குப் பொருத்தமான வகையில் ஜனவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒருசில மாதங்கள் அரச செலவினங்களை முகாமைத்துவப்படுத்த வேண்டியுள்ளது.

மேலும் செய்திகள் புதிதாக 3,000 பேரை ஆட்சேர்க்க நேர்முகப்பரீட்சை

A/L பரீட்சை கருத்தரங்கு, பிரத்தியேக வகுப்புக்கள் இன்று நள்ளிரவு முதல் தடை

அதற்கமைய, பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்தில் செலுத்துவதற்கும், பதவிநிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை குறித்த சில தினங்களுக்குப் பின்னர் செலுத்துவதற்கும், திறைசேரியால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image