தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (20) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை, அத்தாட்சிப்படுத்தப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை, மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்க கால
அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், தபால் மூலம், விண்ணப்பங்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை சமர்பிப்பதற்காக தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் ஒன்றை தேர்தல் ஆணைக்குழு நிறுவியுள்ளது.
அதன்படி தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், வட்ஸ்அப், வைபர் அல்லது பேஸ்புக் மூலம் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகள் குறித்த நிலையத்துக்கு சமர்ப்பிக்க முடியும்.