நிகழ்நிலை (ஒன்லைன்) முறையில் ஆசிரியர் இடமாற்ற செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக மனிதவள முகாமைத்துவ கட்டமைப்பின் சரியான தகவல்களை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இந்த கட்டமைப்பில் சேர்க்கப்படும் ஆசிரியர்களின் தனிப்பட்ட மற்றும் சேவை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஒன்லைன் மூலம் ஆசிரியர் இடமாற்ற செயற்பாடு இடம்பெறும்.
எனவே இந்த இடமாற்ற செயற்பாட்டை துரிதமாகவும் முறையாகவும் முன்னெடுப்பதற்கு இவ்வாறான தகவல்கள் நாளாந்தம் இற்றைப்படுத்தப்பட வேண்டும்.
அதனால் இவ்வாறான விடயங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் வலய கல்விப்பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கல்வியமைச்சு ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளது.