எதிர்வரும் திங்கட்கிழமை (23) ஆரம்பமாக உள்ள 2022 (2023) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக நான்கு விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று தெரிவித்தார்.
கைதிகளுக்காக கொழும்பு மகசீன் சிறைச்சாலையிலும், விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக இரத்மலானை மற்றும் தங்காலையிலும், மேலும் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கான பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இம்முறை பரீட்சைக்கு 278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் 53,513 தனியார் பரீட்சார்த்திகளும் என 331,709 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்ற உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.