ஒரு வருட பயிற்சிக்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள்/ டிப்ளோமாதாரிகளின் மேன்முறையீட்டு கடிதங்கள் ஆராயப்பட்டு மீள தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பொது நிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை நேற்று (18) வௌியிட்டுள்ளது.
All Stories
2019ஆம் ஆண்டு பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட 329 பட்டதாரிகளுக்கு இன்று (17) நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
போட்டிப் பரீட்சையை நடத்துவதற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடத்தி பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்காவும், இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கான நியமனங்களை வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வட மாகாணசபையின் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை இவ்வாரத்திற்குள் நிரந்தர சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிடின் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பட்டதாரி பயிலுநர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பட்டதாரி பயிலுநர்கள் உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர்களது 25 கோரிக்கைகளுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி பெறப்பட்ட ஒரு இலட்சம் கையெழுத்துடன் கூடிய மனு கையளிக்கப்படவுள்ளதுடன் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.
தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்காக 10,000 மாணவர்களை திறந்த பல்கலைக்கழகத்தில் இணைக்க பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது
பட்டதாரிகளை பயிலுநர்களை பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ் 2019ம் ஆண்டு 11, 111 கட்டமாக தேசிய பாடசாலைகளில் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டு பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பட்டதாரிகளை ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் 111 இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (23) இடம்பெற்றது.
பட்டதாரி பயிலுநர்களாக 2020 / 2021 இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான உரிமைகள் பாதுகாப்பது குறித்து பல கோரிக்கைகளை முன்வைத்த கடிதமொன்று ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ளது.
பட்டதாரி பயிலுநர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 25,000 ரூபாவாக அதிகரிக்கமாறும் பயிற்சி காலத்தை 6 மாதங்களாக குறைக்குமாறும் கோரப்படவுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
வயதெல்லை காரணமாக தொழில் இல்லாமல் போன சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பைக்கோரி கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.