All Stories

புகையிரத திணைக்களத்தில் இணைய வாய்ப்பு

புகையிரத திணைக்களத்தின் நிலைய பொறுப்பதிகாரி தரம் 111 பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிவரும் கொரோனா தொற்று பரவல் நிலையை கருத்திற்கொண்டு இறுதித்திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31ம் திகதி வௌியான வர்த்தமானியில் இவ்விண்ணங்கோரல் தொடர்பான விபரங்கள் வௌியாகியிருந்தன.

விண்ணப்பங்களை 'பரீட்சை ஆணையாளர் நாயகம், இலங்கை பரீட்சைத் திணைக்களம் (திட்டமிடல்- நிறுவனம் மற்றும் வௌிநாட்டுப் பரீட்சைகள் பிரிவு), தபெ இலக்கம் 1503, கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

புகையிரத திணைக்களத்தில் இணைய வாய்ப்பு

 பெப்ரவரி இறுதிக்குள் 14,000 பட்டதாரிகள் பொதுச் சேவையில் இணைக்கப்படுவர்

கடந்த அரசாங்கத்தினால் பயிலுநர்களாக இணைக்கப்படட 14,000 பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் அரச சேவையில் உள்வாங்கப்படுவார்கள் என்று அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 பெப்ரவரி இறுதிக்குள் 14,000 பட்டதாரிகள் பொதுச் சேவையில் இணைக்கப்படுவர்

மேலும் 700 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஆயுர்வேத பட்டப்படிப்பை பூர்த்தி 700 பட்டதாரிகளை விரைவில் ஆயர்வேத திணைக்களத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

மேலும் 700 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்திடைந்தோருக்கான சந்திப்பு

ஊவா மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான பதுளை மாவட்டக் கூட்டம் எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ளது.

ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்திடைந்தோருக்கான சந்திப்பு

பயிலுநர் பட்டதாரிகளை சேவையில் இணைக்க விரைவில் நடவடிக்கை

கடந்த அரசாங்கத்தினால் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கு இம்மாத இறுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்கபபடவுள்ளதாக பொது செவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

பயிலுநர் பட்டதாரிகளை சேவையில் இணைக்க விரைவில் நடவடிக்கை

பட்டதாரிகள் 8500 பேர் விரைவில் அரச சேவைக்கு!

பயிலுநர் பட்டதாரிகளாக மேலும் 8500 பேரை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் சுற்றில் அரச சேவை பயிற்சிக்காக தகுதி பெறாத பட்டதாரிகளின் மேன்முறையீட்டை கவனத்திற்கு கொண்டு இவர்கள் இணைக்கப்படவுள்ளன் என்று அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வாய்ப்பு பெற்ற பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் அப்பட்டதாரிகளின் நிரந்தர வதிவிட பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை அரச சேவையில் பயிற்சிக்காக 50,000 பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பட்டதாரிகள் 8500  பேர் விரைவில் அரச சேவைக்கு!

போலாந்தில் தொழில்வாய்ப்பு, ஏமாற்றப்படும் அப்பாவிகள்

அதிக வருமானம் தரக்கூடிய தொழில் வாய்ப்புக்களை போலாந்தில் பெற முடியும் என வௌிநாடு செல்ல முயற்சி செய்து வந்தவர்களை ஏமாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த மோசடி நடவடிக்கையில் சில உள்நாட்டு வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களும் தொடர்புபட்டுள்ளதாகவும் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போலாந்தில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக விளம்பரங்கள் செய்வதனூடாக வௌிநாட்டில் வேலை தேடுபவர்கள் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்.

போலாந்தில் வேலைவாய்ப்பை பெறுறவதற்கு பணி அனுமதி (work permit) அவசியம் என்று போலாந்துக்கான இலங்கை தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது என்றும் பணியத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போலாந்தில் வேலை தேடுபவர்களிடமிருந்து 750 - 1000 அமெரிக் டொலர்களை அறவிடுகின்றனர். இதன்போது இந்தித் தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள போலாந்து தூதரக அதிகாரிகளுடன் நேர்முகத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதி மொழி வழங்குகின்றனர் இந்த மோசடிக்குழவினர் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா டெய்லி நியுஸ் பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ​போலாந்து தூதரகம் அமைக்கப்படவில்லை. புது டில்லியில் உள்ள தூதரகமே இலங்கை விவகாரங்களையும் கையாள்கிறது. ஏற்கனவே இலங்கையில் போலாந்து விசா நிலையம் அமைக்க வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு திட்டமிட்டு செய்யப்படும் மோசடி செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கையில் ஒரு விசா நிலையம் ஆரம்பிப்பது அவசியம். போலாந்தில் சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. அந்த தொழில் வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனினும் வௌிநாட்டு தொழில்வாய்ப்பை தேடும் அப்பாவிகளை முகவர் நிலையங்கள் சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தான் நாம் அரசாங்கங்களுக்கிடையில் ஒப்பந்தங்களை மேற்கொள்கிறோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, போலாந்தில் தொழில்வாய்ப்பை பெறுவதற்கான அனுமதிபத்திரம் கிடைக்காதவரை எந்த முகவர் நிலையங்களுக்கும் பணம் செலுத்த வேண்டாம் என்று இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் வௌிநாடுகளில் தொழில்வாய்ப்பை தேடும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

போலாந்தில் தொழில்வாய்ப்பு, ஏமாற்றப்படும் அப்பாவிகள்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image