பட்டதாரி பயிலுநர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

பட்டதாரி பயிலுநர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

பட்டதாரி பயிலுநர்களாக 2020 / 2021 இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான உரிமைகள் பாதுகாப்பது குறித்து பல கோரிக்கைகளை முன்வைத்த கடிதமொன்று ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ளது.

குறித்த கடிதத்தை அலுவலக ரீதியாக எதிர்வரும் 8ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை கையெழுத்திடப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் கோரப்பட்ட திணைக்களங்களிலேயே சேவைக்கு உள்வாங்கல், 2020 மார்ச் மாதத்தை பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட திகதியாக கருதி (2020 செப்டெம்பர் 2/ மார்ச் 1) ஒரு வருட சேவையை பூர்த்தி செய்தவர்களுக்கு நிரந்தர நியமனத் திகதியாக பெப்ரவரி 2 அறிவித்தல். காலம் செல்லுமாயின் பிந்திய திகதியையிட்டு நியமனம் வழங்குதல், குறைக்கப்பட்ட மகப்பேற்று விடுமுறைத் தினத்தை மீண்டும் வழங்கல், சேவையில் உள்வாங்கப்படுதலை ஒழுங்குமுறையுடன் வௌிப்படைத்தன்மையுள்ளதாக செயற்படுத்துதல், சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பின்னர் அனைவருக்கும் பொதுவான. பொறுத்தமான கடமைபொறுப்புக்களை வழங்கல், ஆசிரியர் நியமனம் வழங்கல் முன்மொழிவுகளை 'அலங்கார' வார்த்தையாக மட்டுமே பயன்படுத்தாமல் அதற்கான ஒழுங்கு நடைமுறைகளை உருவாக்குதல், மாதந்த கொடுப்பனவை ஒழுங்காக அனைவருக்கும் ஒரே திகதியில் வழங்கல், அனைவருக்கும் பொதுவான வேலைத்திட்டத்தின் ஒழுங்கான பயிற்சியை வழங்கல் ஆகிய கோரிக்கைகள் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த கோரிக்கைள் அடங்கிய கடிதம் பட்டதாரிகளின் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image