பட்டதாரி பயிலுநர்கள் உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர்களது 25 கோரிக்கைகளுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி பெறப்பட்ட ஒரு இலட்சம் கையெழுத்துடன் கூடிய மனு கையளிக்கப்படவுள்ளதுடன் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 4ம் திகதி ஒரு இலட்சம் கையெழுத்துகளடங்கிய மனு மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டச் செயலகங்களுக்கும் முன்பாக தேசிய எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் அதன் உத்தியோகப்பூர்வ முகப்புத்தப்பக்கத்தில் தகவல் வௌியிட்டுள்ளது.
1999-2008ம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சுக்கள், திணைக்கள மட்டங்களி்ல் இணைத்துக்கொள்ளபட்ட பட்டதாரிகளுக்கு உள்ள பதவியுயர்வுக்கான செயல்முறையொன்றை உருவாக்குதல். தொழிற்சங்க போராட்டத்தினூடாக வெல்லப்பட்ட 01.09.2018 தினம் குறிப்பிடப்பட்ட CS/DOS/03/01 ஒன்றிணைந்த சேவைப் பணிப்பாளர் நாயகங்களின் உத்தரவுக்கமைய வௌியிடப்பட்டுள்ள கடிதத்திற்கமைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கண்காணிப்பு பதவிகளை பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், திணைக்களங்கள், அமைச்சுக்கள், மாகாணசபை நிறுவனங்கள் மட்டங்களில் பதவிகளை உருவாக்கி சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட காலம் தொடங்கி ஓய்வு பெறும் வரையில் MN4/MN5/MN7 சம்பள அளவுகளுக்களுக்கான பதவி உயர்வு பெறக்கூடிய பதவியுயர்வு முறையை செயற்படுத்தல் உட்பட 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவில் ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.