வாய்ப்பிழந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு மேலும் வாய்ப்பு- பெயர் விபரங்கள் அறிய

வாய்ப்பிழந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு மேலும் வாய்ப்பு- பெயர் விபரங்கள் அறிய

ஒரு வருட பயிற்சிக்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள்/ டிப்ளோமாதாரிகளின் மேன்முறையீட்டு கடிதங்கள் ஆராயப்பட்டு மீள தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பொது நிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை நேற்று (18) வௌியிட்டுள்ளது.

இது தொடர்பில் பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே. ஜே ரத்னசிறியின் கையெழுத்துடன் 18.03.2021 திகதியிட்டு வௌியிடப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பெயர் பட்டியலில் பெயர் இடம்பெற்ற பட்டதாரிகள்/ பட்டதாரிகள் உடனடியாக உரிய பிரதேச செயலகங்களுக்கு விஜயம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர். அவ்வாறு விஜயம் செய்யும் பட்டதாரிகளின் நியமனத் திகதி பயிற்சிக்காக சமூகமளிக்கும் தினத்தில் இருந்து ஆரம்பமாகிறது. இம்மாதம் 26ம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமூகமளிக்காக பட்டதாரிகள்/ டிப்ளோமாதாரிகள் நியமனம் பெற விரும்பாதவர்கள் என்று கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலையற்ற பட்டதாரிகள்/ டிப்ளோமாதாரிகளை பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளல் - 2020 தொடர்பில் அமைச்சின் இணையதளத்தில் 21.01.2021 அன்று வௌியிடப்பட்ட கடிதத்தில் 2, 3, 4 ஆகிய பிரிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைய, தகமைகள் பரிசோதித்தல், நேர்முகத்தேர்வில் கையளிக்கவேண்டிய ஆவணங்கள் கொண்டு வருதல் வேண்டும். மேலும் தொழிலின்மையை உறுதிப்படுத்தப்படுவது தொடர்பில் குறித்த பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் உங்களுக்குமானதாக கொள்ளவும். அத்துடன் நேர்முகத்தேர்வின் போது பிரதேச செயலாளரிடம் கையளிக்கவேண்டியVIII விண்ணப்பமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியான பெயர் விபரங்களை அறிய 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image