மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பட்டதாரி பயிலுநர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பயிற்சி பெறும் பட்டதாரி பயிலுநர்களுடைய ப பட்டப்படிப்புக்கமைய ஆசிரியர் நியமனம் வழங்குவது தொடர்பில் நாளை (03) கல்வியமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் மேலும் பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.