பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் இணைப்பதில் கவனம் செலுத்தப்படுமா?

பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் இணைப்பதில் கவனம் செலுத்தப்படுமா?

 கடந்த 2019ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை இவ்வாரத்திற்குள் நிரந்தர சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிடின் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

 நேற்றைய திகதியிட்டு (15) ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்தின் தலைவரின் கையெழுத்துடன் பொதுசேவைகள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சருக்கு கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 2019ம் ஆண்டு பயிலுநர்களாக இணைக்கப்பட்ட பட்டதாரிகளுடைய ஒரு வருட பயிற்சி காலம் நிறைவடைந்து 7 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை அவர்கள் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பல தடவைகள் ஊடகங்களில் சுட்டிக்காட்டியபோதும் இதுவரை செயற்படுத்தப்படவில்லை. குறித்த பயிலுநர்களை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடந்த ஒக்டோபர் மாதம் நாம் கோரியிருந்தோம். அமைச்சரவை அனுமதியையும் கடந்து ஏற்பட்டுள்ள இத்தாமதத்தை நியாயப்படுத்த முடியாது.

முறையான நேர்முகத்தேர்வின் பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட குறித்த பட்டதாரிகளை தாமதப்படுத்தாமல் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கமாறும் இவ்வாரத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image