தொழிற்சங்க பெண் அங்கத்தவர்களுக்கு வலுவூட்டல் செயலமர்வு

தொழிற்சங்க பெண் அங்கத்தவர்களுக்கு வலுவூட்டல் செயலமர்வு

தொழிற்சங்கங்களின் பெண் அங்கத்தவர்களை வலுவூட்டல் மற்றும் அவர்களுடைய தொடர்பாடல் திறனை விருத்தி செய்தல் ஆகிய நோக்கங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு தின வதிவிட செயலமர்வு கடந்த 17, 18ம் திகதிகளில் வத்தளை, பெகஸஸ் ரீவ் ஹோட்டல் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது தகவல் அறியும் உரிமை, ஊடகசந்திப்பொன்றை எவ்வாறு நடத்துவது மற்றும் உலக தொழிலாளர் தாபனத்தனால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கான C190 பிரகடனம் போன்றவை குறித்து செயலமர்வில் கவனம் செலுத்தப்பட்டது.

வளவாளர்களாக ஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஜனரஞ்சன, ஊடகவியலாளர், சட்ட அதிகாரி பாக்யா வீரகோன், ஊடகவியலாளர் பிரியான் ஆர் விஜயபண்டார ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில், அரச, தனியார் துறை மற்றும் முறைசாரா தொழிற்றுறை சார் தொழிற்சங்கங்களின் பெண் அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

workshop 1

workshop 2

workshop 3

c190 ws

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image