பட்டதாரி பயிலுநர்களுக்கு கொடுப்பனவை அதிகரிக்குமா அரசாங்கம்?

பட்டதாரி பயிலுநர்களுக்கு கொடுப்பனவை அதிகரிக்குமா அரசாங்கம்?

பட்டதாரி பயிலுநர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 25,000 ரூபாவாக அதிகரிக்கமாறும் பயிற்சி காலத்தை 6 மாதங்களாக குறைக்குமாறும் கோரப்படவுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 4ம் திகதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் என்ற வகையில் தேசிய எதிர்ப்பு தினத்தை பிரகனடப்படுத்தியுள்ளோம். இதன்போது மேற்குறிப்பிட்ட விடயங்கள் உட்பட 25 கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன என்று சந்தன சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய எதிர்ப்பு தினத்தில் நாம் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் நிறுவன ரீதியில் மாவட்ட, மாகாண பொது சேவைகளில் பெறப்பட்ட ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மனுவை கையளிக்கப்படவுள்ளதுடன் அன்றைய தினம் கொழும்பில் பொது நிர்வாக அமைச்சின் முன்பாகவும் ஏனைய மாவட்டங்களில் மாவட்ட செயலகங்களுக்கு முன்பாகவும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன் ஒரு இலட்சம் கையெழுத்து பெறப்பட்ட மனுவும் கையளிக்கப்படவுள்ளது.

இதன்போது, பட்டதாரி பயிலுநர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை 20,000 ரூபாவில் இருந்து 25,000 ரூபாவாக அதிகரித்தல், பட்டதாரி பயிலுநர்களுக்கான ஒரு வருட பயிற்சியை 6 மாதமாக குறைத்து 6 மாத பயிற்சியின் பின்னர் உடனடியாக நிரந்தர நியமனம் வழங்குதல் பெண் பட்டதாரி பயிலுநர்களுக்கு மகப்பேற்று விடுமுறை 84 வேலைநாட்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கான சுற்றுநிருபம் வௌியிடல், அத்துடன் பட்டதாரி பயிலுநர்களுக்கு 1999 தொடக்கம் இதுவரை காலப்பகுதியில் சேவைக்காலத்துடன் இணைத்தல், மற்றும், 1999 - 2021 வரையான காலப்பகுதியில் சேவையில் காலப்பகுதியில் பட்டம்பெற்ற பட்டதாரிகளுக்கு பதவியுயர்வுககான செயல்முறை ஒன்றை தயாரித்தல் உட்பட பல கோரிக்கைள் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image