பட்டதாரிகளை பயிலுநர்களை பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ் 2019ம் ஆண்டு 11, 111 கட்டமாக தேசிய பாடசாலைகளில் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டு பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பட்டதாரிகளை ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் 111 இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் தேசிய பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் குறைந்தளவே உள்ளமையினால் பயிற்சி பெற்ற அதே தேசிய பாடசாலைகளில் நிரந்தர நியமனம் வழங்குவது சாத்தியப்படாது என்றும் கல்வியமைச்சு இன்றைய திகதியில் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எமது அமைச்சின் கீழுள்ள தேசிய பாடசாலைகளில் பயிற்சி பெற்ற பெரும்பாலான பட்டதாரிகள் ஆசிரியர் நியமனத்தை எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வேறு அமைச்சின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெறுவார்களாயின் ஆசிரியர் நியமனம் பெறுவது சாத்தியப்படாது. எனவே இவ்வமைச்சின் கீழ் பயிற்சி பெற்ற அனைவரையும் தற்போது வெற்றிடங்கள் உள்ள தேசிய பாடசாலைகளிலேயே அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர சேவையில் இணைக்க தீர்மானித்துள்ளோம்.
எனவே, கல்வியமைச்சின் அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதிபர்களூடாக இம்மாதம் 3ம் திகதி அல்லது அதற்கு முன்பதாக கீழே தரப்பட்டுள்ள முகவரி, தொலைநகல் இலக்கம், மின்னஞ்சல் முகவரி அல்லது வட்ஸப் இலக்கத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
எந்தவொரு பட்டதாரி பயிலுநரும் மேற்குறிப்பிட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பாவிடின் அவர்கள் இவ்வமைச்சின் கீழ் நியமனம் பெற விரும்பவில்லையென கருதி அதற்கேற்ப தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
_++