பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் உள்வாங்குவதில் அநீதி

பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் உள்வாங்குவதில் அநீதி

2019ஆம் ஆண்டு வடமேல் மாகாணசபைக்கு உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமன கடிதத்தில் நியமனத் திகதி 2021 ஜனவரி முதலாம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பட்டதாரிகள் பயிற்சியின் பின்னர் பணியாற்றிய 5 மாதங்கள் பயனற்றதாகியுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பயிலுநர்களாக இணைக்கப்பட்ட குறித்த பட்டதாரிகள் பயிற்சி காலம் முடிந்த பின்னர் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்வதாக உறுதியளித்திருந்தபோதிலும் அவர்கள் நிரந்தர சேவைக்குள் உள்வாங்கப்படவில்லை.

இவ்வநீதிக்கு எதிராக புத்தளம் பிரதேச மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் எதிர்காலத்தில் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அம்மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பிந்திய திகதியில் நியமனக் கடிதங்களை வழங்குமாறு தொழிற்சங்க்ம என்ற ரீதியில் போராட தீர்மானித்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image