2018 இல் இணைக்கப்பட்ட பட்டதாரி பயிலுர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

2018 இல் இணைக்கப்பட்ட பட்டதாரி பயிலுர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

2018 ஆம் ஆண்டு பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளை உடனடியாக நிரந்தர சேவையில் இணைக்குமாறு கோரி இம்மாதம் 24ம் திகதி போராட்டமொன்றை நடத்த ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ம் திகதி சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளுக்கே இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பாதிக்கப்பட்ட அனைத்து பயிலுநர் பட்டதாரிகளையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Author’s Posts