தமிழ் மொழி மூல பாடசாலை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தவறிய பட்டதாரிகள்
தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 525 வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் 260 பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்திலுள்ள இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கே குறைந்த எண்ணிக்கையான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
குறித்த மாவட்டங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 525 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்பட்டபோதிலும் 260 பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்று சப்ரகமுவ மாகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் ருக்மணி ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
குருவிட்ட கீரைகலை தமிழ் வித்தியாலயத்தில் 63 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக்கட்டடத்தின் திறப்பு விழாவில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணத்தில் 200 தமிழ் மொழி மூல பாடசாலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.