தற்போதைய பொருளாதார நெருக்கடியின் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளதுடன் பல குழந்தைகள் முறைசாராதொழிலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று சுதந்திர பெண்கள் இயக்கத்தின் தேசிய குழு உறுப்பினர் தில்கா சுராங்கனி தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைக்கு எப்படி முகங்கொடுப்பது என்று தெரியாமல் மக்களும் கோபத்தில் உள்ளனர். இதனால் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியைப் பெற்றுத் தரக்கூடிய பெருந்தோட்டத் துறை, ஆடை உற்பத்தி மற்றும் வெளிநாட்டு தொழில் என்பன அதிகம் பெண்களின் ஆதிக்கத்துக்குட்பட்டவை. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பெண்கள் அதிக பங்கு வகிக்கின்றனர். அவர்களுடைய சேவையின் பலனை ஒட்டுமொத்த சமூகமும் அனுபவிப்பதை உறுதி செய்யுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம் என்றும் சுராங்கனி தெரிவித்துள்ளார்.
குறைந்த பட்சம் அவர்கள் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய சம்பளத்தை வழங்க அரசாங்கமும் தொழில் வழங்குநர்களும் முன்வரவேண்டும். பணவீக்கம் 60% ஆக இருப்பதாகவும், எதிர்காலத்தில் அது 65% ஆக உயரும் என மத்திய வங்கி ஆளுநர் எச்சரித்துள்ளார்.
அரசாங்கத்தின் அனைத்து செயற்றிட்டங்களுக்கும் ஒரு முறைமையினை நடைமுறைப்படுத்துகின்றனர். ஆனால் ஏன் ஒரு முறைமையினை கடைப்பிடிக்காதுள்ளனர் என்றும் சுராங்கனி கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசாங்கம் சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்த வேண்டும். மக்கள் அதிக உற்பத்தி வேலைகளைச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையர்கள் போதுமான அளவு வேலை செய்வதில்லை என்று பலரும் கருதுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திவயின