தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் மக்கள் அன்றாடம் மூன்று நேர உணவை பெற்றுக்கொள்வதும் கேள்விக்குறியாகியுள்ளது.
குறிப்பாக, அன்றாடம் உழைப்பை நம்பி வாழ்பவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.
நாட்டில் எரிபொருள் இன்மையினால் பலர் வரிசைகளில் காத்திருக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் ஊபர் சேவையினூடாக உணவுகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் இளைஞர்கள் மாற்று வழியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஆம், அவர்கள் தற்போது மோட்டார் சைக்கிளில் பாவனையை மாற்றி சைக்கிள்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
நல்ல மாற்றங்கள் முன்னேற்றத்திற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் அனைவருக்கும்!